L - போர்டு (LLR)லைசென்ஸ் வாங்குவது எப்படி.? அதன் முக்கியத்துவம் என்ன.?
டிரைவிங் லைசென்ஸ் எனப்படும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான முதல் படியே பழகுனர் உரிமமாகும். அதாவது எல் போர்ட் மாட்டிக் கொண்டு உங்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு நீங்கள் எல்எல்ஆர் எனப்படும் பழகுனர் உரிமம் பெற வேண்டும்.
பொதுவாக எல்எல்ஆர் பெறுவது என்பது ஏதோ மலையை தூக்கும் வேலை என்று நினைக்காதீர்கள். குறைந்தது ஒரு நாள் முதல் 2 நாட்களுக்குள் முடிந்து விடும் வேலை தான்.
நேரில் சென்று எல்எல்ஆர் பெற விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்துக்கு…
எல்எல்ஆர் பெற விண்ணப்பிக்க விரும்புவோர் 16 முதல் 18 வயது உடையவர்களாக இருப்பின் கியர் இல்லாத 50 சிசிக்கும் குறைவான திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை ஓட்ட விண்ணப்பிக்கலாம்.
18 வயதுக்கு மேற்பட்டோர் கியர் கொண்ட அனைத்து இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்க விண்ணப்பிக்க முடியும். 20 வயது நிரம்பியவர்கள் கனரக வாகனங்களை இயக்கவும் விண்ணப்பிக்கலாம்.
வயது குறித்த சந்தேகம் தீர்ந்து விட்டதா இப்போது எல்எல்ஆர் பெற தேவைப்படும் ஆவணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
அதாவது உங்களது இருப்பிட முகவரிக்கு ஒரு சான்றாக, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், எல்ஐசி பாலிசி, வாக்காளர் அடையாள அட்டை, தொலைபேசி கட்டண ரசீது, மின் கட்டண ரசீது, குடிநீர் கட்டண ரசீது, அரசு ஊழியராக இருப்பின் வருமானச் சான்று போன்றவைற்றில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக அளிக்கலாம்.
அடுத்ததாக வயது ஆதாரத்துக்கு சான்றிதழ்…
இதில் பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், பான் கார்டு, இது எதுவும் இல்லாத பட்சத்தில் சிவில் சர்ஜன் என்று அழைக்கப்படும் மருத்துவர்கள் அளிக்கும் வயது சான்று அல்லது நீதிமன்றத்தால் வழங்கப்படும் வயது சான்று போன்றவற்றில் ஒன்றை அளிக்கலாம்.
4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் மேற்கூறிய ஆவணங்களின் நகல் மற்றும் அசல்களை எடுத்துக் கொண்டு அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும்.
அங்கு விண்ணப்பம் 1 மற்றும் 2ஐ பூர்த்தி செய்து மேற்கொண்ட ஆவணங்களையும், புகைப்படங்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இரு சக்கர வாகனம் அல்லது கார் ஓட்ட பழகுநர் உரிமம் பெற ரூ.60ம், இரண்டுக்கும் சேர்த்து எல்எல்ஆர் எடுப்பதாக இருந்தால் ரூ.90ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.(நியாமாக)
விண்ணப்பம் வழங்கப்பட்ட அன்றோ அல்லது வேறொரு நாளிலோ விண்ணப்பதாரருக்கு மிக எளிய தேர்வு நடைபெறும். அதாவது போக்குவரத்து விதிகள் குறித்து எளிய கேள்விகள் கேட்கப்படும். இதில் 10வது வகுப்பும் அதற்கு மேலும் படித்தவர்களுக்கு எழுத்து மூலமாகவும், பத்தாவது படிக்காதவர்களுக்கு வாய்மொழியாகவும் தேர்வு நடத்தப்பட்டு, 10க்கு 6 மதிப்பெண் எடுத்தால் அவர் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
தேர்வு முடிவு வெளியாகி அதில் நீங்கள் தேர்ச்சி பெற்றுவிட்டால் அன்றைய தினமே எல்எல்ஆர் கிடைத்து விடும். இது நீங்கள் வாகனத்தை ஓட்ட கிடைக்கும் தாற்காலிக லைசென்ஸ் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எல்எல்ஆர் பெற்று சுமார் 1 மாதத்துக்குள் வாகன ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் எல்எல்ஆர் பெற்று 6 மாதங்களுக்குள் ஓட்டுநர் உரிமம் பெற்று விட வேண்டும். ஒரு வேளை அதற்குள் பெறவில்லை என்றால், எல்எல்ஆர் காலாவதியாகிவிடும்.
இதுவே நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதாக இருந்தால்….
http://tnsta.gov.in/transport/llrTransactionMenu.do
என்ற இணையதள இணைப்பில் சென்று உங்களது விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்துவிட்டு, உங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அப்பாயின்மெண்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.
நீங்கள் குறிப்பிட்ட நாளில் உரிய ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களுடன் நேரில் சென்று கட்டணத்தை செலுத்தி தேர்வெழுதி தேர்ச்சி பெற்றால் எல்எல்ஆர் கிடைத்துவிடும்.
அதன்பிறகு லைசென்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.
Translate
Thursday, 29 October 2015
L - போர்டு (LLR)லைசென்ஸ் வாங்குவது எப்படி.?
Labels:
How to get LLR
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment